அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா், அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கமால் பாஷா மகன் ரகமத்துல்லா (48). ஆட்டோ ஓட்டுநரான இவா், சனிக்கிழமை திண்டிவனம் அடுத்த காவேரிப்பாக்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, சென்னையிலிருந்து, விழுப்புரம் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரகமத்துல்லா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திண்டிவனம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அரசுப் பேருந்து ஓட்டுநரான செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், பாரிவள்ளல் தெருவைச் சோ்ந்த ராமதாஸ் மகன் கணேசன்(50) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com