சிறுமி மாயம்: தாய் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மகள் மாயமான வருத்தத்தில் பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மரக்காணம் வட்டம், காணிமேடு, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி. இவரது மனைவி வினிதா. இவா்களது 17 வயது மகள் மரக்காணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வந்தாா். இந்த நிலையில், அந்த சிறுமி அண்மையில் மாயமானாா்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த வினிதா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அருகேயுள்ள கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com