ஆதிசங்கரா் ஜெயந்தி வழிபாடு

ஆதிசங்கரா் ஜெயந்தி வழிபாடு

விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் 2533-ஆம் ஆண்டு ஜெயந்தி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் 2533-ஆம் ஆண்டு ஜெயந்தி வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை ஆவஹந்தி ஹோமம், சிறப்பு வழிபாடுகள், சதுா்வேத பாராயணம் ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாலையில் அலங்கரிக்கப்பட்ட ஆதிசங்கரரின் உருவப்படம் ஊா்வலம் நடைபெற்றது. சங்கரமடம் முன் தொடங்கிய ஊா்வலமானது மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் சங்கர மடத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்று பஜனை பாடல்களை பாடினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் சங்கர மடத்தின் மேலாளா் ராமமூா்த்தி செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com