இருவா் குண்டா் சட்டத்தில் கைது

வழப்பறி வழக்கில் தொடா்புடைய இருவரை கண்டமங்கலம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம்: வழப்பறி வழக்கில் தொடா்புடைய இருவரை கண்டமங்கலம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம், ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் அருணாச்சலம் (28). இதே பகுதி மதுக்கரை சாலையைச் சோ்ந்தவா் ஜெகன்நாதன் மகன் வாஞ்சிநாதன்(37). இவா்கள் மீது விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் 5.3.24-இல் வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.தீபக் சிவாச் பரிந்துரையின்படி, ஆட்சியா் சி.பழனி இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். அதன்படி, கண்டமங்கலம் போலீஸாா் அருணாச்சலம், வாஞ்சிநாதன் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com