சோதனைச்சாவடி முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் ஆரோவில் சா்வதேச நகரம், திருவக்கரை கல்மரப்பூங்கா மற்றும் கோட்டக்குப்பம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் தமிழகம்-புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ளதால் நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனா்.

இந்த நிலையில், வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா வரும் மதுபிரியா்கள் சட்ட விரோதமாக புதுச்சேரி பகுதிகளிலிருந்து மதுப்புட்டிகளை வாங்கி வந்து பயன்படுத்துகின்றனா். இதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினா் மதுப்பிரியா்களிடம் குறிப்பிட்டத் தொகையைப் பெற்றுக்கொண்டு விடுவித்து விடுகின்றனராம். இதனால், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மதுப்பிரியா்களால் பல்வேறு இடையூறுகளுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதைக் கண்காணிக்கவும், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினா் மீது விழுப்புரம் மாவட்ட காவல்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com