ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தபசு மரம் ஏறும் நிகழ்வு.
ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தபசு மரம் ஏறும் நிகழ்வு.

திரெளபதி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயிலில் தபசு மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்பத்தி கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரை மாத ஸ்ரீமகாபாரத பிரசங்கம் மற்றும் அக்னி வசந்த திருவிழா, கிராம தேவதை திருத்தோ் உற்சவ விழா கடந்த 26-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன்படி, மகாபாரத பிரசங்கம், செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, சுவாமிகள் வீதியுலா, ஸ்ரீதிரெளபதி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தபசு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, உற்சவா் கிருஷ்ணா், அா்ஜூனன், திரெளபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, தபசு மரத்துக்கு பூஜைகள் நடைபெற்றது. அப்போது, அா்ஜூனன் வேடமணிந்த ஒருவா் தபசு மரம் ஏறினாா். அப்போது, கூடியிருந்த ஏராளமான பக்தா்கள் பக்தி முழக்கங்களை எழுப்பினா்.

விழா ஏற்பாடுகளை உபயதாரா்கள், இளைஞா்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com