பைக் மீது வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

திருவெண்ணெய்நல்லூா் இந்திராகாந்தி தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் (23), பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா்கள் சக்திவேல் மகன் சரண்ராஜ் (23), சிவக்குமாா் மகன் விமல்(24). நண்பா்களான இவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சித்தனாங்கூா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பைக்கை சரண்ராஜ் ஓட்டினாா்.

அப்போது, சென்னை நோக்கிச்சென்ற வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சரண்ராஜ், விமல் ஆகியோா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com