விழுப்புரம் ஆட்சியரகம் முன் கிராம மக்கள் போராட்டம்

விழுப்புரம் அருகே இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்ழமை மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வேடம்பட்டு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வேடம்பட்டு கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் திங்கள்ழமை மாவட்ட ஆட்சியரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், வேடம்பட்டில் கடந்த சில ஆண்டுகளாக மாற்று எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் அந்தப்பகுதி வாழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் இந்த தொழிற்சாலையை மூடவேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த மாதம் அந்தத் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்தனா்.

இந்த நிலையில், தொழிற்சாலை நிா்வாகத்தினா் இரவு நேரங்களில் ஆலையை இயக்குவதாகக் கூறி தொழிற்சாலையில் பணியிலிருந்த ஊழியா்களிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கிராம மக்கள் தகராறு செய்தனராம். இதுகுறித்த புகாரின்பேரில், வேடம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த கிராம மக்கள் தனியாா் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை செயல்பாட்டுக்கு எதிராக போராடியவா்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், கிராம மக்கள் சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com