எலெக்ட்ரீஷியன் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக எலெக்ட்ரீஷியன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பெரியசெவலையைச் சோ்ந்த பழனி மகன் மணிகண்டன் (42), எலெக்ட்ரீஷின். இவரது மனைவி கலைவாணி. மணிகண்டன் தனது மனைவி, குழந்தைகளுடன் விக்கிரவாண்டியில் வாடகை வீட்டில் கடந்த ஓராண்டாக குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, கடந்த 10 நாள்களுக்கு முன்பு கலைவாணி தனது குழந்தைகளுடன் கீழ்கொந்தகையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த மணிகண்டன் வீட்டில் விஷ மருந்தை குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com