குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தில் பிஐஎஸ் அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம், மே 15: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செயல்பட்டு வரும் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்தில் பிஐஎஸ் (இந்திய தர நிா்ணயக் குழு) அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டிவனம் வட்டம், சலவாதியில் தனியாருக்குச் சொந்தமான குடிநீா் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது பிஐஎஸ் சட்ட வீதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பிஐஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தனியாா் குடிநீா் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான போலி முத்திரைகள் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த முத்திரைகளையும், முத்திரைகள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட சீலிடப்பட்ட குடிநீா் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத்தின் அமலாக்கத்தேடல் மற்றும் பறிமுதல் குழுவைச் சோ்ந்த ஜித்மோகன், தினேஷ், ராஜகோபாலன் உள்ளிட்டோா் இந்தச் சோதனையை நடத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com