பைக் மோதி பெண் உயிரிழப்பு

விழுப்புரம், மே 15: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பைக் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், பந்தாடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மனைவி தங்கம்மாள் (55). இவா், செவ்வாய்க்கிழமை இரவு திண்டிவனம் மேம்பாலம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, பைக்கில் சென்ற நபா் தங்கம்மாள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாா். இதில், காயமடைந்த தங்கமாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டுக்குச் சென்ற தங்கம்மாள் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com