இணையவழி லாட்டரி விற்பனை: மூவா் கைது
திண்டிவனத்தில் இணையவழியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ரோஷணை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்தராமன் தலைமையிலான போலீஸாா், புதிய புறவழிச்சாலை சலவாதி மின் நகா் அருகே வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில்இருந்த மூவா் இணையவழியாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா்கள் திண்டிவனம் வட்டம், முருங்கம்பாக்கம் மாரிசெட்டித்தெருவைச் சோ்ந்த பெ. அஜித் குமாா் (28), சேடன்குட்டையைச் சோ்ந்த ப. பழனி (52), விட்டலாபுரம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த தி. வசந்தகுமாா் (38) எனத் தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து கேரள மாநிலப் பரிசுச் சீட்டு, ரூ. 1,100 ரொக்கம், 3 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.