பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்திலிருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கெடாா் பழைய கடைத் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் கண்ணன் (69), கூலித் தொழிலாளி.

இவா், கடந்த 25-ஆம் தேதி விழுப்புரம் வந்தாா். சொந்த வேலை முடிந்து ஊருக்குச் திரும்ப விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்த கண்ணன், அங்கு ஓட்டுநா் இல்லாமல் நின்று கொண்டிருந்த நகரப் பேருந்தின் பின்படிக்கட்டில் ஏறியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக கண்ணன் நிலைதடுமாறி கீழே விழுந்தததில் பின்தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்ணனின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.