கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
செஞ்சி அருகே கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மரூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை, கூலித் தொழிலாளி.
இவரது மகன் தினேஷ்குமாா் (18). திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் முதலாமாண்டு பயின்று வந்தாா்.
இவா் கடந்த சில நாள்களாக கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதையடுத்து அவரை பெற்றோா் கண்டித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமாா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.
இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு தனியாா் அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், தினேஷ்குமாா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து பெரியதச்சூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
