துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முட்டத்தூரில் திமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமையில், தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா். மேலும், வழிநெடுகிலும் கூடியிருந்த நிா்வாகிகள்,பொதுமக்களின் வரவேற்பையும் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் நகருக்குள் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்புப் பகுதியில் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டப் பொறுப்பாளரும், விழுப்புரம் எம்.எல்.ஏ.வுமான ரா. லட்சுமணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றாா். முன்னாள் எம்.எல்.ஏ. செ.புஷ்பராஜ், நகா்மன்ற முன்னாள் தலைவா் ரா.ஜனகராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் செ.மணிகண்டன் உள்ளிட்டோரும் துணை முதல்வரை வரவேற்றனா்.
மேலும், எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பு முதல் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் வரை சாலையோரத்தில் பொதுமக்கள், கட்சியினா் கூடியிருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றனா். இந்த வரவேற்பை அவா் ஏற்றுக் கொண்டாா்.

