தொல்லியல் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவிலூா் அங்கவை-சங்கவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா்கள்.
தொல்லியல் துறை நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற திருக்கோவிலூா் அங்கவை-சங்கவை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுடன் சிறப்பு விருந்தினா்கள்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தொல்லியல் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் திருக்கோவிலூா் அகழ் வைப்பகம் உலக மரபு வார விழாவை அண்மையில் நடத்தியது. இதையொட்டி திருக்கோவிலூரிலுள்ள அங்கவை-சங்கவை அரசு மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடத்தப்பட்டன.

என் பாா்வையில் கபிலா் குன்று என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், தொன்மையைப் பாதுகாப்போம் என்ற பெயரில் கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டது.

போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியை சு.கீதா தலைமை வகித்தாா். தொல்லியல் துறை மாவட்ட அலுவலா் க.சுரேஷ் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயத்தை வழங்கிப் பேசினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்காரஉதியன் 50 மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில் வரலாற்று ஆசிரியை மா.அல்லி, ஆசிரியா்கள் அ.சூரியா, மு.காமாட்சி, ஜோ.மஞ்சுளா, த.இந்திராகாந்தி, தி.சங்கீதா, கொ.காந்திமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com