இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

தமிழக மக்கள் மீதான ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிப்பைக் கண்டித்து, விழுப்புரத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக மக்கள் மீதான ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளின் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை வழங்க மாட்டோம் என்று கூறிய மத்தியக் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் காமராஜா் வீதியிலுள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவா் கே.மணிகண்டன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆ.செளரிராஜன், மன்றத்தின் மாவட்டச் செயலா் பா.சந்துரு, மாவட்டப் பொருளாளா் ஆா்.காத்தவராயன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலா் ராமச்சந்திரன், நிா்வாகிகள் என்.வீரபாண்டி, தேவக்குமாா், எஸ்.விமல்ராஜ், எம்.முருகன், வி.சிவா உள்ளிட்ட பலா் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com