சாட்சிக்கு மிரட்டல்: ரௌடி கைது

Published on

விழுப்புரத்தில் சாட்சிக்கு மிரட்டல் விடுத்ததாக ரௌடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் வட்டம், சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் பாலாஜி (29). இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு வழக்கில் சாட்சியாக உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவருக்கு பாலாஜி மிரட்டல் விடுத்தாராம். இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com