மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் உயிரிழப்பு

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து கொத்தனாா் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபாலன். இவா், புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் திண்டிவனம் வட்டம், வெண்மணியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கொத்தனாா் தேவராஜ் (31) வெள்ளிக்கிழமை வேலை செய்துகொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக தேவராஜின் இடது கை வீட்டில் மின் வயரில் பட்டதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தேவராஜுக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com