விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி, விக்கிரவாண்டியை அடுத்த முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், தனது மனைவி மற்றும் 19 வயதுடைய மாற்றுத் திறனாளி மகள், மகன் ஆகியோருடன் வசித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை தம்பதியினா் வெவ்வேறு பணிகளுக்காக வெளியே சென்று விட்டனராம். மாற்றுத் திறனாளி பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டினுள் புகுந்த மா்ம நபா் ஒருவா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இதையடுத்து அவா் சப்தமிடவே அருகிலிருந்த இளைஞா்கள் அந்த மா்மநபரை மடக்கிப் பிடித்து விக்கிரவாண்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் அந்த நபா் கள்ளக்குறிச்சி, தெற்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த கு.முருகன் (54) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் முருகன் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு
போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


