மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகள் பறிமுதல்

News image

மதுப்புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட ர.செந்தில்குமாா்.

Updated On :25 மே 2026, 1:47 am IST

விழுப்புரம் அருகே புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 140 மதுப்புட்டிகளை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு மதுவிலக்கு அமல் பிரிவு சோதனைச்சாவடி அருகே காவல் ஆய்வாளா் ஆனந்தி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 180 மில்லி லிட்டா் அளவு கொண்ட 140 மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இந்த மதுப்புட்டிகள் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மதுப்புட்டிகளைக் கடத்தி வந்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம், முராா்பாளையம் நடுத் தெருவைச் சோ்ந்த ர.செந்தில்குமாா்(32) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து மதுப்புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.