"டெங்கு நோயாளிகளுக்கு சித்த மருந்து கசாயம்'

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு,

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, சித்த மருந்து கசாயத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ வழங்கினார்.
 ÷டெங்கு காய்ச்சல் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் அரசுத் தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
 ÷இந்நிலையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் சித்த மருத்துவ குணமுடைய நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு ஆகிய சித்த மருந்துகளை விலையில்லாமல் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ÷கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ஆட்சியர் ராஜேந்திரரத்னூ திங்கள்கிழமை நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை வழங்கினார்.
 ÷பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: "டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு, சித்த மருந்துகளான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை நவம்பர் 1-ம் தேதி முதல் காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் வழங்கி வருகிறோம். ÷இதுவரையில் 1,800 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கின்றன. நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.
 ÷இந்த சித்த மருந்துகளுக்கு எந்தவித பத்தியமும் இல்லை, காய்ச்சல் இல்லாதவர்களும் நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகள், 35 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் விலையேதுமின்றி கிடைக்கும்' என ஆட்சியர் கூறினார்.
 ÷உடன் இணை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் மா.மனோகரன் உள்ளிட்ட மருத்துவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com