பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தொழிலாளர் கல்வி நிலையத்தில் மாணவர் சேர்க்கை: 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 மே 2013, 12:23 am IST

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளில் சேர வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் புனிதவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தால் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப்படிப்புகள் மற்றும் மாலை நேர பிஜிடிஎல்ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை பட்டயப் படிப்பு) ஆகிய பட்ட மற்றும் பட்டயப் படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பி.ஏ. தொழிலாளர் மேலாண்மை 3 ஆண்டு படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சியும், 2 ஆண்டு முதுகலை (எம்.ஏ.) படிப்பு மற்றும் பிஜிடிஎல்ஏ பட்டயப் படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு இளங்கலைப்  பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு இந்தப் படிப்புகள் முன்னுரிமை தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் படிப்புகளில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்தவர்களுக்கு தொழிற்சாலைகளில் பணியாளர் அலுவலர், மனிதவள அலுவலர் போன்ற பணி வாய்ப்புகள் கிடைக்கும். இக்கல்வி நிலைய மாணவர்களை பல்வேறு நிறுவனங்கள் வளாகத் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண். 5, காமராஜர் சாலை, த.பெ.எண்.2955, சென்னை-600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம் அனைத்துப் படிப்புகளுக்கும் ரூ.200. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு 044-28440102, 28445778 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.