ரயில் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடலூரில் தொழிற்சங்க அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிற்சங்க அரசு ஊழியர் கூட்டமைப்புத் தலைவர் ரமணி தலைமை வகித்தார். பொதுச்செயலர் சுந்தர்ராஜா, குளோப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசுப் பணியாளர் மகாசம்மேளன அகில இந்திய பொதுச்செயலர் கு.பாலசுப்பிரமணியன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் எம்.சேகர், ஏஐடியூசி மாவட்டத் தலைவர் மாரியப்பன், அகில இந்திய பொதுச்செயலர் ஜெயராமன், மாநிலச் செயலர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
உயர்த்தப்பட்ட ரயில் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். ராணுவத்தில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை கைவிட வேண்டும். வங்கித் துறையை தனியார் மயமாக்குவதை நிறுத்திட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.