திட்டக்குடி அருகேயுள்ள புலிகரம்பலூர் மாரியம்மன் கோயில் பால்குட விழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் ஆண்டுத் திருவிழா கடந்த 10 நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட விழா புதன்கிழமை நடைபெற்றது. புலிகரம்பலூர் எல்லையில் அமைந்துள்ள ஓடையில் இருந்து சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்துக்கொண்டு மேலவீதி, வடக்குவீதி, கீழ்வீதி, கீழவாசல் வழியாக கோயிலை அடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஊராட்சித் தலைவர் இந்திராகுமாரி ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.