பண்ருட்டியை அடுத்து மேல்வடக்குத்து காலனியில்
ரூ. 5 லட்சம் செலவில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் மேல்வடக்குத்து காலனி மற்றும் பொன்னங்குப்பம் உள்ளது. சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் குடிநீரால் இப்பகுதி மக்கள் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பழைய பைப் லைனை அகற்றிவிட்டு புதிய பைப் லைன் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கான தொகையை மாவட்ட ஆட்சியர் விருப்பு நிதியில் இருந்து வழங்க வேண்டும் என ஊராட்சிமன்றத் தலைவர் கோ.ஜெகன் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதன்பேரில், ரூ. 5 லட்சம் செலவில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை ஊராட்சிமன்றத் தலைவர் கோ.ஜெகன் புதன்கிழமை பார்வையிட்டார்.