பெண்ணாடம் அருகேயுள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பு வியாழக்கிழமை அகற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம், கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரியில் இருந்து பெண்ணாடம் பகுதிக்கு பாசனத்துக்கு வரும் வாய்க்கால் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.
இதையறிந்த பொதுபணித்துறை பொறியாளர் சின்னராஜ், உத்தரவின் பேரில், உதவிப்பொறியாளர் மாணிக்கம், கோவிந்தன், பாசன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்தனர்.