சுடச்சுட

  

  போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக அண்ணாமலைப் பல்கலை.யில் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் போலி

  பிளஸ்-2 சான்றிதழ் அளித்து உதவிப் பேராசிரியராக சேர்ந்து மோசடி செய்துள்ளதாக சிதம்பரம் அம்மாப்பேட்டை தில்லைக் காளியம்மன் நகரைச் சேர்ந்த ஆர்.ராஜாமோகன் (36) மீது பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன் பேரில், அண்ணாமலை நகர் போலீஸார் உதவிப் பேராசிரியர் ஆர்.ராஜாமோகன் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். ஆர்.ராஜாமோகனது சொந்த ஊர் பண்ருட்டி ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai