Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    By சிதம்பரம்  |   Published on : 01st December 2014 03:51 AM  |   அ+அ அ-   |    |  

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் 2014-15ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    259 படிப்புகள்: அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர்கள் சேவையை கருதி 1979-ல் தொலைதூரக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டது. இத்தொலைதூரக் கல்வி மையத்தில் புதுதில்லி தொலைதூரக் கல்வி கவுன்சில் அனுமதி பெற்ற மொத்தம் 259 படிப்புகள் உள்ளன.

    மருத்துவப் படிப்புகள் 12-ம், மருந்தியல் படிப்புகள் 2-ம். வேளாண் படிப்புகள்- 9-ம், பொறியியல் படிப்புகள் 53-ம் மற்றும் கலை, அறிவியல், தமிழ், இசை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, முதுநிலை டிப்ளமா படிப்புகள் நடத்தப்படுகின்றன.

    டிசம்பர் 15 வரை தேதி நீட்டிப்பு: நிகழ் கல்வியாண்டில் மாணவ, மாணவிகள் சேர்ந்து பயில டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தின், தமிழகத்தில் 88 படிப்பு மையங்களும், 79 தகவல் மையங்களும் செயல்படுகின்றன.

    மேற்கண்ட மையங்களில் விண்ணப்பம் பெற்று, அங்கேயே அனுமதி சேர்க்கை செய்யலாம் என

    தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai