Enable Javscript for better performance
அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    அரசின் சாதனை விளக்கக் கண்காட்சி

    By கடலூர்,  |   Published on : 01st December 2014 03:48 AM  |   அ+அ அ-   |    |  

    அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோயிலில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

    கடலூர் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடைபெற்ற இப்புகைப்படக் கண்காட்சியில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் மற்றும் அரசின் நலத் திட்டங்களை எளிதில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

    மேலும், கடலூர் மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

    இப்புகைப்பட கண்காட்சியை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்த்து பயன்பெற்றனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai