சுடச்சுட

    

    அரசு மருத்துவமனையில் 3 சுகாதார ஊழியர்கள் சஸ்பெண்ட்

    By கடலூர்  |   Published on : 01st December 2014 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 சுகாதார ஊழியர்களை ஆட்சியரின் பரிந்துரைப்படி கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் வித்யாசங்கர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கடந்த வாரம் விருத்தாசலம், திட்டக்குடி மருத்துவமனைகள் மற்றும் மங்களூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். இதில், விருத்தாசலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, சுகாதாரப் பணிகள் தொய்வடைந்திருந்ததோடு, உள்நோயாளிகளின் சிகிச்சைப் பிரிவுகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகக் தெரிகிறது.

    இதையடுத்து ஆட்சியர் பரிந்துரைப் படி மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குநர் வித்யாசங்கர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து சுகாதாரப் பிரிவு ஊழியர்களான கொளஞ்சிவேல், ஜெயச்சந்திரன் மற்றும் பழனிச்செல்வி ஆகிய மூவரையும் ஞாயிற்றுக்கிழமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai