சுடச்சுட

    

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் மூன்றாம் சோமவாரம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது.

    சிவபெருமான் வீரதீரச் செயல்புரிந்த அட்ட தலங்களில் திரிபுர சம்ஹாரம் நிகழ்ச்சி நிகழ்ந்த இடம் திருவதிகை வீராட்டானேஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கள்கிழமை) அன்று சிவன் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

    முதல் மற்றும் இரண்டாம் சோமவார நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

    டிசம்பர் 1ஆம் தேதி மூன்றாம் சோமவார நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

    அதன்படி, பிற்பகல் 2 மணிக்கு பெரியநாயகி அம்பாள் சமேத வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு ஆகம விதிப்படி வலம்புரி இடம்புரி இத்யாதி 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் சுவாமிக்கு நாகாபரணத்துடன் கூடிய புஷ்ப அலங்காரமும், பெரியநாயகி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சுவாமி அம்பாள் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமும், புதுச்சேரி சிவனடியார் திருக்கூடத்தினரால் நடத்தப்படும் சிவமுழக்கமும், இரவு 8 மணிக்கு சோட சோபசார தீபாராதனை மற்றும் வீரட்டானேஸ்வர் வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai