சுடச்சுட

    

    காப்பீட்டு திட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

    By கடலூர்,  |   Published on : 01st December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 442 பேருக்கு ரூ.48 கோடியே 11 லட்சத்தில் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையிலும், ஒரு சில சிகிச்சைகளுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,016 நோய் சிகிச்சைகளும், 23 வகையான நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

    கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் விவரம்: தீக் காயங்கள் 356 பேர், புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை 832, அறுவை சிகிச்சை 476, மருத்துவச் சிகிச்சை 2,476, கண்நோய் சிகிச்சை 1,452, கர்ப்பப்பை நீக்கம் மற்றும் கட்டி அகற்றுதல் சிகிச்சை 1,125, சிறுநீரகக் கோளாறு உப்புநீர் அகற்றுதல், சிறுநீரகக் கல் நீக்கம், இரத்த சுத்திகரிப்பு (டையாலிஸிஸ்) மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான சிகிச்சை 6,679, மாரடைப்பு அறுவை சிகிச்சை, இதய இரத்த குழாய் அடைப்பு பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய வால்வு மாற்றும் அறுவை சிகிச்சை, பிறவி இதய நோய்களுக்கான அறுவை சிகிச்சை உள்பட இருதய நோய்களுக்கான சிகிச்சை 2,692 பேருக்கும், நுரையீரல் தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சை 269, குடல் நோய் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை 287, குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை 520, பச்சிளம் குழந்தைகளுக்கான சிகிச்சை 1,534 குழந்தைகளுக்கும், காது மூக்கு மற்றும் தொண்டை நோய்களுக்கான சிகிச்சை 1,321, மாற்று அறுவை சிகிச்சை 246, தோல் தொடர்பான சிகிச்சை 23, நரம்பியல் தொடர்புடைய சிகிச்சை 1,129, பக்கவாத நோய்களுக்கான சிகிச்சை 9, எலும்பு தொடர்புடைய நோய்களுக்கான சிகிச்சை 1,224, பொது மருத்துவ சிகிச்சை 1,326, விபத்து சிகிச்சை 151, காது ஒலிக் கருவி 267, நோய் தொடர் சிகிச்சை 48 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 24,442 பேருக்கு ரூ.48 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 781 க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

    மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் விளக்கம் மற்றும் சந்தேகங்களுக்கு 1800 425 3993, என்ற எண்ணில் இலவசமாக தொடர்பு கொள்ளலாம். காப்பீட்டுத் திட்ட புதிய அடையாள அட்டை பெற 7373004559, 7373004561, 7373004564 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai