சுடச்சுட

  

  கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

  By கடலூர்  |   Published on : 01st December 2014 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கொள்ளிடம் ஆற்றுநீரை நீராதாரமாகக் கொண்டு நடைபெற்று வரும் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக கடலூர் முதுநகர் சுகாதார நிலைய வளாகத்தில் தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் அறை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

  அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கொள்ளிடம் ஆற்றுநீரை நீராதாரமாகக் கொண்டு மாவட்டத்தில் கடலூர் நகராட்சி, புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிகள் உள்பட 812 வழியோர ஊரக குடியிருப்புகளில் உள்ள 6 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் பயன்படும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.260 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

  மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் முதன்மையானது குடிதண்ணீர், எனவே, குடிநீர் திட்டப் பணிகளை முதன்மையான பணியாக மேற்கொண்டு விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, துறை அலுவலர்கள் இப்பணிகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

  இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அ.செல்லக்கண்ணு, உதவிப் பொறியாளர் ரா.சேஷையா, இளநிலை

  பொறியாளர்கள் பாலகுமார், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai