Enable Javscript for better performance
சிக்னல் கோளாறு: சோழன் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    சிக்னல் கோளாறு: சோழன் விரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதம்

    By பண்ருட்டி,  |   Published on : 01st December 2014 03:52 AM  |   அ+அ அ-   |    |  

    சிக்னல் கோளாறு காரணமாக சோழன் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் நின்று தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு தினமும் பிற்பகல் 1.22 மணிக்கு வந்து 1.24 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

    இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு வந்துகொண்டிருந்த போது சிக்னல் கிடைக்காமல் நடுவழியில் நிறுத்தப்பட்டது, பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சிக்னல் பாயின்டில் பழுது நீக்கிய பின்னர், சோழன் விரைவு ரயில் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai