சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 48 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

  கடந்த 3 நாள்களாக மாவட்டத்தில் கனமழை பெய்தது. சனிக்கிழமை இரவு வரையில் பெய்த மழை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை நீடித்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான சீதோஷண நிலையே நிலவியது.

  தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் 4-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

  மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் உயரந்துள்ளது. அதே நேரத்தில், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணமேடு, உச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கீரை பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும், கடலூர்-சிதம்பரம் சாலை உள்பட பெரும்பாலான கிராமச் சாலைகள் சேதமடைந்தன.

  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 48 மில்லி மீட்டர் மழை பதிவானது.

  பண்ருட்டி 42, காட்டுமன்னார்கோவில் 14, தொழுதூர் 4, ஸ்ரீமுஷ்ணம் 32, விருத்தாசலம் 9.20, பண்ருட்டி 6.20, கொத்தவாச்சாரி 31, கீழச்செருவாய் 4.10, வானமாதேவி 23, அண்ணாமலை நகர் 33, சேத்தியாத்தோப்பு 14.20, புவனகிரி 20, லால்பேட்டை 15, மீ.மாத்தூர் 20, காட்டுமயிலூர் 6.50, வேப்பூர் 5, குப்பநத்தம் 9.80, லாக்கூர் 3.20, பாலந்துறை 7 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

  மழைக்கு கடலூர் அருகே உள்ள கொடிக்கால்குப்பத்தைச் சேர்ந்த சி.மேகலா (40) என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், அவரது வீட்டில் வளர்த்த ஆடு ஒன்று உயிரிழந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai