சுடச்சுட

  

  சிதம்பரத்தில் உள்ள ஜவுளிக் கடையில் ரூ.84 ஆயிரம் மதிப்பிலான துணிகளை திருடியதாக மூவரை நகர குற்றப் பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

  சிதம்பரம் மேலரத வீதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் சனிக்கிழமை இரவு ரூ.83,650 மதிப்பிலான பட்டுப் புடவைகள், சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டி.ஷர்ட் உள்ளிட்ட துணிமணிகளை மூவர் திருடியதாக சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஜவுளிக்கடை மேலாளர் பாலசுந்தரம் புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஜவுளிகளை திருடியதாக அந்தக் கடையில் வேலை பார்த்த கீழமூங்கிலடி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (19), அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர் மணி (19), சிதம்பரம் சுப்பிரமணியர் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (21) ஆகிய மூவரை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai