சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் குறுகிய பாலத்தின் தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

  விருத்தாசலம் அருகேயுள்ள கோ.மாவிடந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்பாபு (23) என்பவர் லாரியில் சென்னையிலிருந்து, விருத்தாசலத்துக்கு பருப்பு ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அப்போது, விருத்தாசலத்தை அடுத்த செம்ளக்குறிச்சி குறுகிய பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதாமல் இருக்க வாகனத்தை ஓரம்கட்ட முயன்றுள்ளார். அப்போது, குறுகிய பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

  இதனால், விருத்தாசலம் உளுந்தூர்பேட்டை சாலையில் 30 நிமிடத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து

  தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் விரைந்து சென்று தடுப்புச் சுவரில் மோதிய லாரியை எடுத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai