சுடச்சுட

    

    திருவள்ளுவர், பாரதியார் பிறந்த நாள்: மத்திய அரசுக்கு பாரதிதாசன் இலக்கிய மன்றம் நன்றி

    By கடலூர்  |   Published on : 01st December 2014 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     திருவள்ளுவர், பாரதியார் பிறந்த நாளை மத்திய அரசு வட மாநிலங்களில் கொண்டாட முடிவு செய்துள்ளதை கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் வரவேற்று நன்றி தெரிவித்துள்ளது.

    மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றத்தின் சிறப்புக்கூட்டம் மன்றத் தலைவர் கவிஞர் கடல் நாகராசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துர்க்கா பயிற்சிக் கல்லூரி முதல்வர் கி.செந்தில்முருகன் முன்னிலை வகித்தார்.

    திருமலை, எழுத்தாளர் தில்லையாடி ராஜா, திருக்குறள் பேரவைத் தலைவர் குறள்ராசா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    கூட்டத்தில், பாரதியாரின் பிறந்த நாளை போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், திருவள்ளுவர், பாரதியார் பிறந்த நாளையும் வட மாநிலங்களில் மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்த மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மன்றச் செயலர் கவிஞர் க.இளங்கோவன் வரவேற்றார். பொருளர் நெல்லிக்குப்பம் ஜோதி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai