சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற வனத்தோட்டக் கழக மண்டல மேலாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  தமிழ்நாடு வனத்தோட்டக் கழக விருத்தாசலம் மண்டல மேலாளராக பணியாற்றிய மோகன்தாஸ் அண்மையில் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா விருத்தாசலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு வனவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். ஒப்பந்ததாரர்கள் முத்து.கதிரவன், தமிழக வாழ்வரிமைக் கட்சி நகரத் தலைவர் ரமேஷ், முடப்பள்ளி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஒப்பந்ததாரர்கள் தமிழ்ச்செல்வன், வேல்முருகன், சிலம்பரசன், குமரேசன், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai