சுடச்சுட

  

  பண்ருட்டி ஒன்றியம், புறங்கனி கிராமத்தில் உள்ள நூலகம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

  கிராமப் பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உலக நிகழ்வுகளை தெரிந்து கொள்ளவும், வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்கள் பெரும்பாலும் செயல்படவில்லை. இதில் உள்ள விலை மதிப்பற்ற புத்தகங்கள் கரையானுக்கு இறையாகி சேதம் அடைந்து வருகின்றன.

  புறங்கனி கிராமத்தில் உள்ள நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லையாம். நூலகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான நூல்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை எனவும் கூறுகின்றனர். நூலகத்தின் முன் பகுதியில் மண் கொட்டப்பட்டுள்ளதால் செல்லக் கூட வழியில்லை.

  திறக்கப்படாமல் உள்ள இந்நூலகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai