மகள், பேத்தியை காணவில்லை என பெண் புகார்
By சிதம்பரம் | Published on : 01st December 2014 03:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தனது வீட்டுக்கு வந்த மகள் மற்றும் பேத்தியை காணவில்லை என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார்.
சிதம்பரம் மின்நகர் 5-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வாசுகி (50). இவரது வீட்டுக்கு சென்னை கே.கே.நகரில் வசிக்கும் அவரது மகளும், ராஜசேகரன் என்பவரது மனைவியுமான கமலாதேவி (33), பேத்தி நந்தினி (3) ஆகியோர் வந்து தங்கியிருந்தனர். கடந்த நவம்பர் 20-ம் தேதி உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்குச் சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
சென்னையில் உள்ள வீட்டுக்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் வாசுகி, தனது வீட்டுக்கு வந்த மகள், பேத்தியை காணவில்லை என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.