Enable Javscript for better performance
மத்திய அமைச்சருக்கு திருக்குறள் பேரவை நன்றி - Dinamani

சுடச்சுட

    

    மத்திய அமைச்சருக்கு திருக்குறள் பேரவை நன்றி

    By சிதம்பரம்  |   Published on : 01st December 2014 03:50 AM  |   அ+அ அ-   |    |  

    திருவள்ளுவர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவு பிறப்பித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு சிதம்பரம் தில்லை திருக்குறள் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, அந்தப் பேரவை நிறுவனத் தலைவர் க.அழகிய மணவாளன் வெளியிட்ட அறிக்கை: மாநிலங்களவையில் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய், திருவள்ளுவர் குறித்தும், தமிழ்மொழியின் சிறப்பு குறித்தும் பேசியுள்ளார். அப்போது தமிழை கௌரவிக்கும் வகையிலும், திருக்குறளின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும் திருவள்ளுவர் பிறந்த தினத்தை அடுத்த ஆண்டு முதல் தென்மாநிலங்களில் கொண்டாடுவது போல், வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார்.

    அவரது கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மத்திய அரசு விழாவாக திருவள்ளுவர் பிறந்தநாள் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளதற்கு, அவருக்கு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai