சுடச்சுட

    

    பாலூர் அரசுப் பள்ளியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் நெல்லிக்குப்பம் கோட்டத்துக்கு உள்பட்ட பாலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

    பள்ளித் தலைமை ஆசிரியர் எம்.திருஞானம் தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சி.பழனிராஜு, உதவி செயற்பொறியாளர் டி.செளந்தரராஜன், உதவி மின் பொறியாளர்கள் ஆர்.விஜய்முருகன், ஆர்.ஜெயபிரகாஷ் ஆகியோர் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பேசினர்.

    மேலும், மாணவ, மாணவிகளுக்கு இத்தலைப்புகளில் பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai