சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திமுக பொருளர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.

  கடலூர் மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை(டிச.1) மாலை

  7 மணியளவில் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கட்சி சார்பில் பொதுக்கூட்டமும், காலையில் சிதம்பரம் நகரச் செயலர் திருமணமும் நடக்கிறது. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

  இதனை முன்னிட்டு சனிக்கிழமை இரவு கடலூர் மாவட்டத்துக்கு அவர் வந்தார். அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கடலூர் மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

  மாவட்டச் செயலர் சால்வை அணிவித்து வரவேற்றார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிதம்பரம் சென்றார்.

  இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் இள.புகழேந்தி, சபா.ராஜேந்திரன், குழந்தை தமிழரசன், நகர்மன்ற முன்னாள் தலைவர்கள் தங்கராசு, ஏ.ஜி.ராஜேந்திரன், நகரச் செயலர் ராஜா, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கார்த்தி, குறிஞ்சிப்பாடி பாலன், வழக்குரைஞர் அணி சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai