சுடச்சுட

  

  வீராணம் ஏரியை தூர் வார வேண்டும் என கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  கீரப்பாளையம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 17-வது ஒன்றிய மாநாடு பரதூர் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் மாநாட்டினை தொடக்கி வைத்துப் பேசினார்,

  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம் வாழ்த்துரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் மூசா பங்கேற்றுப் பேசினார். இதனைத் தொடர்ந்து செல்லையா, சுப்பிரமணி ஆகிய 12 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலாளராக பா.வாஞ்சிநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மக்களுக்கு மீண்டும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க வேண்டும், வேலை செய்த பாக்கித் தொகையை உடன் வழங்கவேண்டும், வீராணம் ஏரியை தூர்வார வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம், யூரியா தட்டுப்பாட்டினை போக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai