Enable Javscript for better performance
வைத்தியநாத சுவாமி கோயில் தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி- Dinamani

சுடச்சுட

    

    வைத்தியநாத சுவாமி கோயில் தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி

    By கடலூர்,  |   Published on : 01st December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் திருத்தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

    திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் பல கோடி மதிப்பில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புனரமைக்கும் பணிக்குப் பின்னர் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 26-ம் தேதி நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இக்கோயிலுக்கு புதிதாக ரூ.70 லட்சம் மதிப்பில் வைத்தியநாத சுவாமி, அசனாம்பிகை, விநாயகர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கும் திருத்தேர் செய்யும் பணி தொடங்கியது. அரும்பாவூர் ஸ்தபதி சின்ராஜ் தலைமையிலான ஸ்தபதிகள் திருத்தேரை செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூன்று தேர்களுக்கும் சக்கரம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. கோயில் சிவாச்சாரியர் தண்டபாணி குருக்கள் தலைமையில் வேத விற்பனர்கள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலமாக 3 தேர்களுக்கும் சக்கரம் பொருத்தப்பட்டது.

    விரைவில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என கோயில் திருப்பணிக் குழுவினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai