சுடச்சுட

    

    ஹெச்.ராஜாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்

    By கடலூர்  |   Published on : 01st December 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழர் நலனுக்காக தமிழர் வாழ்வுரிமைக்காக போராடி வரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவிற்கு பாஜக தேசியச் செயலர் எச். ராஜா அண்மையில் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தமிழர் இன விடுதலைக்காக போராடுகிற தலைவர்கள் அனைவரையும் எப்போதும் ஒருமையில் விமர்சித்து எச். ராஜா பேசி வருகிறார்.

    அதேபோன்று, தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாளை தமிழகத்தில் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறினார்.

    இத்தகைய செயல்களுக்கு எச். ராஜாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய போக்கை கைவிடா விட்டால் அவருக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பினரின் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai