சுடச்சுட

  

  வைகோவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்து அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வைகோ பிரதமர் நரேந்திர மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களையோ எதிர்த்து கடுமையாகப் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று வன்முறையைத் தூண்டும் வகையில் கூறியுள்ளார்.

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு விமர்சனம் செய்து பேசியதாக சொல்லப்படும் சென்னை தியாகராயர் நகர் தியாகத் திருநாள் பினாங்குப் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.

  அக்கூட்டத்தில் இந்தியாவில் 75 விழுக்காட்டினர் இந்தி பேசுவோர் என்று ராஜ்நாத் சிங் கூறியிருப்பதைத் தவறான தகவல் என்றும், இந்தி பேசாத தமிழ்நாட்டு மக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இந்தியாவிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்றும், காத்மாண்டு சார்க் மாநாட்டில் நரேந்திர மோடி ராஜபட்சவுக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துப் பேசியது ஓர் அரசு வெளிநாட்டுத் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய பொதுநிலை தவறிய போக்கு என்றும் வைகோ விமர்சித்தார்.

  இதுபற்றி தஞ்சையில் செய்தியாளர்கள் கேட்ட போது, எச்.ராஜா மேற்கண்டவாறு கூறி, வைகோவுக்கு எதிராகத் தன் கட்சித் தொண்டர்களிடம் வன்முறையைத் தூண்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai