சுடச்சுட

  

  விருத்தாசலத்தில் சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பிஎஸ்என்எல் சார்பில் டிசம்பர் 6}ல் மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

  இதுகுறித்து, பிஎஸ்என்எல் கடலூர் தொலைதொடர்பு மாவட்ட முதுநிலை பொதுமேலாளர் எஸ்.லீலாசங்கரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், விருத்தாசலம் பிஎஸ்என்எல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட தொலைபேசி நிலையங்களில் கட்டண பாக்கி வைத்துள்ள வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்த விருத்தாசலம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் டிசம்பர் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

  எனவே, நிலுவைத்தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் டிசம்பர் 6-ம் தேதிக்கு முன்னதாக பணம் கட்டி நீதிமன்றம் வருவதை தவிர்க்கலாம். இல்லையென்றால் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று சமரச அடிப்படையில் நிலுவைத் தொகையை செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai